Blog

TMT reinforcement பார்களின் சோதனைமுறை

TMT முறையானது, கட்டுமானத் துறையில் வலுவூட்டப்பட்ட கம்பிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக உபயோகிக்கப்படுகிறது. இது ஒரு புரட்சிகரமான செயல்முறை. ஏனெனில் இது கம்பிகளுக்கு அதிக இழுவலிமை மற்றும் நீண்மையை அளிக்கிறது.  TMT வலுவூட்டுக்கம்பிகளில் பல்வேறு தரங்கள் உள்ளன.  Fe 415, Fe 500, Fe  550, Fe 600 முதலானவை.  இந்த எண்கள் குறைந்தபட்ச நெகிழ் வலிமையை குறிக்கும்.

இந்த வலிமை உண்மையானதா?

TMT  வலுவூட்டுக்கம்பிகள் அனைத்து ஸ்டீல் வலுவூட்டும் நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்பட்டாலும், அவை தொடுதல், உணர்தல் மற்றும் பார்வையிடுதல் மூலம் தரம் அறியப்படமாட்டாது.  தரப்படுத்தல் மட்டுமே சாமானியனுக்கு வலுவூட்டுக் கம்பிகளை தேர்வு செய்வதற்கு சரியான வழிமுறை. விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ளபடி, வலுவூட்டு கம்பிகள் சிறந்த தரமும் குணமும் கொண்டுள்ளனவா என்பதை அறிவது சாத்தியமில்லை.

சோதனை

வலுவூட்டு கம்பிகளின் பலத்தை அறிய, பின்வரும் சோதனைகள் கையாளப்படுகின்றன:

  • இழுவலிமை சோதனை
  • நெகிழ்வுவலிமை சோதனை
  • வளைவு மற்றும் மறுவளைவு சோதனை
  • நீட்சி சதவிகித சோதனை
  • வேதியல் பகுப்பாய்வு சோதனை
  1. இழுவலிமை சோதனை வலுவூட்டுக் கம்பிகளில் பரிசோதிக்கப்படும் நடைமுறை சோதனையாகும். TMT  வலுவூட்டுக்கம்பிகள் இழுவலிமைகொண்டு இழுக்கப்படும் சோதனைக்கு ஆட்படுகின்றன.  இழுவலிமையை கண்காணிக்க கம்பிகள் முறிவுபெறும் நிலை வரை இழுக்கப்படுகின்றன.
  2. நெகிழ் வலிமை சோதனையின்போது வலுவூட்டுக்கம்பிகள், உருமாற்றம் ஏறும் வரை இணைக்கப்படுகின்றன. அதாவது கம்பிகள் மீண்டும் முந்தைய நிலைக்கு மாற்றப்பட இயலாது.
  3. நீட்சி சதவிகித சோதனையில், கம்பிகள் முறிந்துபோகும் வரை உருமாற்றம் செய்யப்படுகிறது. TMT கம்பிகளை தேர்ந்தெடுக்கும்பொழுது நீட்சி நெகிழ்வலிமையை கண்டறிவது ஒரு முக்கிய பண்பாகும். Fe 415, 5% வரை நீட்சிநிலை அடைகிறது.  ஆனால் Fe 500, 12% வரைதான் நீட்சிபெறுகிறது.  ஒவ்வொரு வகை TMT கம்பியும் அதனதன் உபயோகத்திற்கு தக்கவாறு வடிவமைக்கப்படுகின்றன.
  4. வளைவு மற்றும் மறுவளைவு சோதனை வலுவூட்டு கம்பிகளின் நீண்மை தன்மையை ஆராய செய்யப்படுகிறது. கம்பியின் மத்திய புள்ளியில் வளைக்கப்பட்டு கம்பிகள் உடையாமல் இருக்கவும் விரிசல் ஏற்படாமல் இருப்பதை கண்டறிய கண்காணிக்கப்படுகிறது.  மறுவளைவு சோதனை, கம்பிகள் அதன் ஆயுட்காலம் வரை எந்த அளவு திரிபு மேற்கொள்கிறது என்பதை கண்டறிய செய்யப்படுகிறது.