Blog

இந்தியாவிலுள்ள 10 முன்னணி எஃகு நிறுவனங்களில் ஒன்றான MS லைப்பயன்படுத்துகின்ற தொழில்நுட்பங்கள்

Blog-cover-1_Tamil

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், போட்டிக்கு ஈடு கொடுக்க முடிகின்ற பலனை கணிசமாகப் பெறும். எஃகு தொழில்துறையில் உள்ள நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில், இந்தியாவிலுள்ள 10 முன்னணி எஃகு நிறுவனங்கள், தங்கள் போட்டியாளர்களை முந்தியிருப்பதற்காக தொழில்நுட்ப புதுமைகளை எப்போதும் சாதகமாக்கிக்கொள்கின்றன. கட்டுமானத் திட்டம் எதுவாக இருப்பினும், அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். இது தான் கட்டுமானத் திட்டம் அனைத்திலும் ஒரு தலையாயப் பொருளாக எஃகு தலையெடுப்பதைச் சுட்டிக்காட்டியது. இன்று, வீட்டுக் கட்டுமானத்திற்கும்,  பிரமாண்ட தொழில்துறைத் திட்டத்திற்கும் ஸ்டீல் டிஎம்டி பார்கள், முதன்மை மூலப்பொருட்களில் ஒன்றாக விளங்குகின்றன.   

MS லைப்-இன் டிஎம்டி பார்கள் முன்பெப்போதும் இருந்திராத அளவிற்கு பிரபலமாகியிருப்பதன் பின்னணியில், சிறந்த பல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இந்த பார்கள் வலிமையானவை, நீடித்திருப்பவை, அரிப்பைத்-தடுக்கக்கூடிவை, தீயைத்-தாங்கக்கூடியவை மற்றும் நெகிழ்த்தன்மை உடையவை. இந்தத் தனித்துவமான பண்புகள் மிகுந்திருப்பதே இதனை எந்தவொரு கட்டுமானத் திட்டத்திற்கும் ஒரு நிகரற்ற விருப்பத்தேர்வாக ஆக்கியிருக்கிறது. தரமான பொருட்களின் சிறந்தக் கூட்டு மற்றும் அதி நவீன தொழில்நுட்பப் புதுமைகளை அரவணைத்திருப்பதே இந்தப் பயனுடைமையால் உந்தப்பட்ட மற்றும் அற்புதமான பண்புகளுக்குக் காரணமாகும்.

இதோ ஒரு கண்ணோட்டம்:

அ)    ஜெர்மானிய தொழில்நுட்பம் – உற்பத்தி நடைமுறையின் பெரும்பகுதி அதி நவீன ஜெர்மானிய தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதிக வலிமையான பார்களை உற்பத்தி செய்ய முடிவதன் சூட்சுமம் இத்தொழில்நுட்பம் தான். MS லைஃப், ஜெர்மானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 500, 550 மற்றும் 600 கிரேடு டிஎம்டி பார்களை தென்னிந்தியாவில் உற்பத்தி செய்த முதல் பிராண்ட் ஆகியுள்ளது.  

ஆ)  மிகச்சிறந்த மூலப்பொருட்கள் – உற்பத்தி நடைமுறையில் மிகச்சிறந்த தரமுள்ள பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த சுரங்கங்கள் சிலவற்றிலிருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இடுபொருட்கள் தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன.

இ)    சிறந்த பிணைப்புறுதி – 600 டிஎம்டி பாரின் தனித்துவமான சாய்வரி பேட்டர்ன் வடிவமைப்பிற்கு புதுமை ஒரு முன்னோடி காரணமாக விளங்குகிறது. பாரானது, சிமெண்டுடன் இடைவெளியின்றி சீராகப் பிணைய இது வழிவகுக்கிறது. கட்டுமான செயல்முறை சீராக நடைபெற இது உதவுகிறது.

ஈ)     அதி நவீன ஆய்வகம் – மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் பல்வேறு தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள அதி நவீன ஆய்வகம் பயன்படுத்தப்படுகிறது.

உ)     தானியங்கி வெட்டும் மற்றும் வளைக்கும் இயந்திரம் – MS லைப்-இன் டிஎம்டி பார்கள், தனிப்பயனாக்க வசதியளிப்பதால், முன்னோடி கட்டுமானத் திட்டங்களின் மிகச்சிறந்த தேர்வாக விளங்குகிறது. தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப நீளம் மற்றும் வளைவுகளைத் தனிப்பயனாக்க தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. MS லைஃப், சமீபத்திய இத்தாலிய வெட்டும் மற்றும் வளைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

ஊ)   பியூசி தொழில்நுட்பம் – கடுமையான உற்பத்தி செயல்முறைகளின் போது, ​​இந்தபார்கள்கடுமையாக வெப்பமூட்டப்படுகின்றன.  உயரிய நெகிழ் வலிமை பெறுவதற்குரிய வெப்பநிலையை உண்டாக்க PUC தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

எ)     புரோகிராம் லாஜிக் கண்ட்ரோல் சிஸ்டம் – இது வெப்பநிலையைக் குறைக்க, உயர் அழுத்தத்தில் தண்ணீரைத் தெளிக்கும் தானியங்கி தண்ணீர் அமைப்புடன் பயன்படுத்தப்படும் மற்றொரு புதுமையான தொழில்நுட்பமாகும்.

முடிவுரை

தொழில்நுட்ப புதுமைகளை அரவணைப்பது என்பது MS லைப்-இன் தலையாய முன்னுரிமைகளில் ஒன்றாகும். சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது. இந்தியாவின் 10 முன்னணி எஃகு நிறுவனங்களில் ஒன்று என்ற வகையில் MS லைப்-ஆனது புதுமை கண்டுபிடிப்புகளை அரவணைக்கத் தவறியதில்லை.  மேலும்,  தரத்தில் நிலைத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டிருப்பதற்கு இது ஒரு தலையாயக் காரணம் ஆகும்.